மத்திய அரசின் இந்தி திணிப்பு என்று கூறுவது வாக்கு வங்கியின் அரசியலுக்காகவே – ஜி.கே.வாசன்
மத்திய அரசின் இந்தி திணிப்பு என்று கூறுவது வாக்கு வங்கியின் அரசியலுக்காகவே என ஜி.கே.வாசன் ட்வீட்.
இந்தி பேசும் மாநிலங்களில் ஐஐடி, மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இந்தி பயிற்று மொழியாகவும், பிற மாநிலங்களில் பிராந்திய மொழிகள் பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும் என்று அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது.
இதற்கு அரசியல் பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நேற்று மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், இந்தி திணிப்பு குறித்து ஜி.கே.வாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மத்திய அரசின் இந்தி திணிப்பு என்று கூறுவது வாக்கு வங்கியின் அரசியலுக்காகவே ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில மொழிக்கே முதல் இடம்.அந்த வகையில் நம் தமிழகத்தில் தாய்மொழி தமிழ்க்குத்தான் முதலிடம், அதில் மாற்றுக் கருத்து கிடையாது என தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் #இந்தி_திணிப்பு என்று கூறுவது வாக்கு வங்கியின் அரசியலுக்காகவே
ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில மொழிக்கே முதல் இடம்.அந்த வகையில் நம் தமிழகத்தில் தாய்மொழி #தமிழுக்குத்தான் முதலிடம்,அதில் மாற்றுக் கருத்து கிடையாது.#gkvasan #tmc #TNPolitics
#hindi #hindilanguage pic.twitter.com/4pNrBaQZWu— G.K.Vasan (@TMCforTN) October 19, 2022