லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின் பேரில் தஞ்சை மாவட்ட காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.
கும்பகோணத்தில் நிதி நிறுவனர்களான ஹெலிகாப்டர் சகோதரர்கள் என அழைக்கப்படும் கணேஷ் மற்றும் சாமிநாதன் இருவர் மீதான நிதி மோசடி புகார்களில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க லஞ்சம் கேட்டதாக தஞ்சாவூர் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிதி நிறுவனத்தை நடத்தி வரும் கணேஷ் மற்றும் சாமிநாதன் இருவரும், தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை திரும்ப கொடுக்கவில்லை என எழுந்த புகார்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தஞ்சை ஆய்வாளர் சோமசுந்தரம் மற்றும் உதவி ஆய்வாளர் கண்ணன் இருவரும் இந்த புகாரில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க 6 கோடி லஞ்சம் கேட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் முன்பணமாக 10 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளதாகவும் வந்த புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் இருவரின் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளது. இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படவும் லஞ்ச ஒழிப்புத்துறை பரிந்துரை செய்துள்ளது.
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…
மும்பை : ஐபிஎல் ஏலம் என்று வந்துவிட்டது என்றால் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு தனித்துவமான அணியாக மாறிவிடும் என்றே சொல்லலாம்.…
வலிப்பு நோய் என்றால் என்ன, அதற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதற்கான முதலுதவி ஆகியவை பற்றி இந்த செய்தி குறிப்பில்…
புதுச்சேரி : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…
சென்னை : நேற்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு முதலில் தவெக தலைவர் விஜய்…