இன்று முதல் அனைத்து பெண்களும் வாரத்தின் அனைத்து நாட்களிலும், 24 மணி நேரமும் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.பின்னர், தமிழகத்தில் அளிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக சிறப்பு ரயில்கள் இயங்கி வருகிறது. இதைத்தொடர்ந்து, சென்னையில் புறநகர் ரயில்களை இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து அரசு ஊழியர்கள் புறநகர் ரயில்களில் பயணிக்கலாம் தெற்கு ரயில்வே அறிவித்தது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையைகாட்டி பயணிக்கலாம் எனவும் சமூக இடைவெளி, முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.இதனைத்தொடர்ந்து படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை புறநகர் ரயில்களில் இன்று முதல் அனைத்து பெண்களும் வாரத்தின் அனைத்து நாட்களிலும், 24 மணி நேரமும் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடற்கரை – செங்கல்பட்டு- திருமால்பூர் மின்சார ரயில்களும் இன்று முதல் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பெண் பயணிகள் மற்றும் அவர்களுடன் பயணிக்கும் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எந்த நேரம் வேண்டுமானலும் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் : விக்கிரவாண்டியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் எல்கேஜி பயின்று வந்த லியா லட்சுமி என்ற மூன்றரை வயது…
சிட்னி : இன்று பார்டர் கவாஸ்கர் தொடரின் 5வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் சிட்னி மைதானத்தில் தொடங்கி…
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…