தூத்துக்குடி – திருவள்ளூர் தொகுதி வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழப்பு.!
மக்களவை தேர்தல் : தூத்துக்குடி மற்றும் திருவள்ளூர் தொகுதிகளில் திமுக கூட்டணி வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்தனர். அதன்படி, தமிழ்நாட்டிலே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் வெற்றிபெற்றார்.
அங்கு சசிகாந்த் செந்திலை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட்டை இழந்தனர். அதே போல், தூத்துக்குடி தொகுதியில் திமுகவின் நட்சத்திர வேர்பாளர் கனிமொழி 3,92,738 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். இங்கும், இவரை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட்டை இழந்தனர்.
கனிமொழி அபார வெற்றி:
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுகவின் நட்சத்திர வேர்பாளர் கனிமொழி 5,40,729 வாக்குகளை பெற்று 3,92,738 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியில் அதிமுக 2ஆவது இடத்தையும், பாஜக கூட்டணி வேட்பாளரை பின்னுக்கு தள்ளி நாம் தமிழர் கட்சி 3ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
திருவள்ளூரில் காங்கிரஸ் வெற்றி:
திருவள்ளூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் வென்றுள்ளார். சசிகாந்த் செந்தில்7,96,956 வாக்குகளை பெற்று 5,72,155 வாக்குகள் வித்தியாசத்தில் தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி மற்றும் பாஜக வேட்பாளர் பாலகணபதியையும் வீழ்த்தினார்.