புதுச்சேரியில் ஜூன் 8 முதல் இவற்றையெல்லாம் திறக்கலாம் – முதல்வர் நாராயணசாமி
புதுச்சேரியில் ஜூன் 8 ஆம் தேதி முதல் வணிக வளாகங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜூன் 30 வரை 5 ஆம் கட்ட ஊரடங்கு தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகம் 8 மண்டலமாக பிரிக்கப்பட்டு, அதற்கான தளர்வுகளை அளித்துள்ளது. அதன்படி, அரசு பேருந்து மற்றும் ரயில் சேவைகள் இன்று முதல் தொடங்கியுள்ளன. மேலும் சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்கள், அனைத்து தனியார் நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள் தவிர்த்து பெரிய நகைக்கடை, ஜவுளிக்கடை போன்றவை 50% பணியாளர்களுடன் செயல்படலாம். டீ கடைகள், உணவு விடுதிகளில் ஜூன் 8 ஆம் தேதி முதல் அமர்ந்து உணவு அருந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியில் ஜூன் 8-ம் தேதி முதல் மத வழிபாட்டுத் தளங்களை திறக்கலாம் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். ஜூன் 8 முதல் வணிக வளாகங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி என்றும் ஓட்டல்கள், நிறுவனங்கள் தனிநபர் இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் புதுச்சேரியில் தற்போது திரையரங்குகள், நீச்சல் குளங்கள் திறக்கப்படாது என்றும் கடற்கரை, பாரதி பூங்கா போன்றவைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.