தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகள் என சசிகளை அறிக்கை.
ஆயுதபூஜை, விஜயதசமி திருநாட்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவரும் வேற்றுமைகளை கடந்து ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று வி.கே.சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அன்னை அம்பிகையின் அருள் பெற நவராத்திரி எனப்படும் ஒன்பது திருநாட்களின் இறுதியில் ஒன்பதாவது நாளான ஆயுத பூஜை மற்றும் பத்தாவது நாளான விஜயதசமித் திருநாட்களை பக்தியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த இனிய ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
அழிவு இல்லாத சிறந்த கல்விச் செல்வத்தை வழங்குகின்ற கலைமகளையும், மன உறுதியோடு துணிவையும் தரும் மலைமகளையும், செல்வங்களை அள்ளித் தரும் திருமகளையும் போற்றி வழிபடுவது நவராத்திரி பூஜையின் சிறப்பு அம்சமாகும். ஜாதிமதங்களை கடந்து செய்யும் தொழிலே தெய்வம்” என்னும் தாரக மந்திரத்தை மனதில் வைத்து, தாங்கள் செய்கின்ற தொழிலில் வெற்றி பெற்றிட, மக்கள் அவ்னையின் அருள் வேண்டி ஆயுதபூஜையன்று பக்தியோடு வழிபடுகின்றனர்.
அதேபோன்று நவராத்திரி பண்டிகையில் பத்தாம் நாளான விஜயதசமி திருநாளில் நாம் தொடங்கிடும் நற்காரியங்கள் எல்லாம் வெற்றியடையும் என்ற நம்பிக்கை கொண்டு மக்கள் அனைவரும்அள்ளை மகா சக்தியை வணங்கி கல்வி, கலை, தொழில் மற்றும் புதிய முயற்சிகளை ஆரம்பித்து விஜயதசமி திருநாளை மிகவும் சிறப்புடன் கொண்டாடி மகிழ்கிறார்கள். இந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாட்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவரும், வேற்றுமைகளை மறத்து ஒற்றுமையோடு வாழ்ந்து, அனைத்து வளமும், நலமும் பெற்று ஈரோடும் சிறப்போடும் சிறந்து விளங்கிட எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கி கொள்கிறேன் என்றுள்ளார்.
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…