மத்திய அரசு தமிழகத்தின் மீது நடத்தும் தாக்குதலை எதிர்கொள்ள திமுகவிடம் தான் சக்தி உள்ளது என பொதுக்கூட்டத்தில் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் இன்று நடைபெற்று வரும் திமுக கூட்டணி கட்சிகளின் பரப்புரை பொதுக் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், பழனிசாமியாக இருந்தாலும், பன்னீர்செல்வமாக இருந்தாலும், அவர்களின் நோக்கம் மக்களை பற்றி கவலையில்லை பணம் தான் ஊழல் தான் என தொடந்து நடைபெற்று வருகிறது.
மத்திய அரசு தமிழகத்தின் மீது ரசாயன தாக்குதலையும், கலாச்சார தாக்குதலையும் நடத்தி வருகிறது. இதற்கு ஆளும் அதிமுக துணை செல்கிறது. இந்தி, சம்ஸ்கிருதம், மீத்தேன், நீட் திணிப்பு உள்ளிட்டவற்றை தமிழகத்தில் திணித்து வருகிறது. இதனை எதிர்க்க கூடிய சக்தி திமுகவிடம் தான் உள்ளது என கூறியுள்ளார்.
ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல, தமிழகத்தின் உரிமைகளை மீட்பதற்கான தேர்தல் இது. புதிய கல்விக்கொள்கையை கொண்டு வந்து கல்வியை பாழாக்கியுள்ளார்கள். எந்த நிலையிலும், எந்த சூழ்நிலையிலும் மக்களுடன் இருப்பவன் நான். 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழகம் 50 ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்றுள்ளது என குறிப்பிட்டுள்ளார்
தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியவில்லை, அதனால் அதிமுகவை மிரட்டி, அச்சுறுத்தி அவர்கள் நிழலில் பயணம் செய்ய ஈடுபட்டுள்ளார்கள். ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு நடந்த அனைத்து சம்பவங்களும் பாஜகவின் சதிகள் இருப்பது அவர்கள் அடிக்கடி தமிழகம் வருவதை வைத்தே தெளிவாக தெரிகிறது என தெரிவித்துள்ளார்.
புயல் பாதிப்புகளுக்காக மத்திய அரசு மிக குறைந்த அளவில்தான் தமிழகதிக்ரு நிதி வழங்கி உள்ளது. 37 சதவீத வாக்குகளை பெற்று பாஜக இன்றைக்கு ஆட்சியில் உள்ளதா என்றால், 63 சதவீத மக்கள் பாஜகவை எதிர்த்து பல்வேறு காட்சிகளுக்கு வாக்குகளை பிரித்து போட்டுவிட்டார்கள் என கூறியுள்ளார்.
மேலும், ராகுல் என்னை சகோதரர் என்றே அழைக்க சொல்வார்.,அவர் என் சகோதரர் தான் என்று கூறி தமிழ்நாட்டில் அமைந்த கூட்டணி போல் இந்திய அளவில் கூட்டணி அமைக்க ராகுல் பொறுப்பேற்க வேண்டும் என பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முன்பு முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…