வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி எடப்பாடி பழனிசாமி கையில் ஒப்படைப்போம் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுகவில் அதிக குழப்பங்கள் நிலவி வருகின்றது.கட்சியில் உள்ள சில பிரமுகர்கள்அதிகாரப் போட்டியில் உள்ளனர்.அதே சமயத்தில் பதவிக்கும் ஆசைப்பட்டு வருகின்றனர்.
தற்போது தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.பிரிந்து சென்ற பன்னீர்செல்வமும் பின்னர் பழனிசாமியுடன் இணைந்து துணை முதல்வராக பதவி வகித்து வருகின்றார்.இதனிடையே வருகின்ற 2021-ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது.ஆனால் அந்த சமயத்தில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற குழப்பம் அதிகம் நிலவி வருகிறது.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அமைச்சர் தங்கமணி பேசியுள்ளார் .அவர் கூறுகையில், ரஜினி அதிசயம் நடக்கும் என்கிறார். உண்மை தான் அதிசயம் நடக்கும். 234 தொகுதியிலும் அதிமுக கொடி பறக்கும். பாஜக விற்கு அதிமுக அடிமை என்கிறார்கள். ஆனால், மத்திய பாஜக அரசிடம் போராடி பல உரிமைகளை பெற்று தந்து உள்ளார் முதல்வர்.2021ல் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி எடப்பாடி பழனிசாமி கையில் ஒப்படைப்போம் என்று பேசினார்.
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…
மும்பை : ஐபிஎல் ஏலம் என்று வந்துவிட்டது என்றால் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு தனித்துவமான அணியாக மாறிவிடும் என்றே சொல்லலாம்.…