மது பிரியர்களே! தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் இயங்காது!

Tasmac Close

Tasmac Close : தமிழகத்தில் மக்களவை தேர்தலை முன்னிட்டு இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்குத் அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூட உத்தரவு.

2024-ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் நாளை மாறு நாள் ( ஏப்ரல் 19) நடைபெறவுள்ளது. தேர்தல் நடைபெறும் அந்த நாள் அதாவது ஏப்ரல் 19-ஆம் தேதி அரசு விடுமுறை என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.  இதனையடுத்து,  தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு எப்போது விடுமுறை என்ற அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது.

அதன்படி, தமிழகத்தில் மக்களவை தேர்தல் நாளை முன்னிட்டு இன்று (ஏப்ரல் 17) முதல் வருகின்ற ஏப்ரல் 19-ஆம் தேதி வரை தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள், பார்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.  மேலும், வரும் ஜூன் மாதம் 4-ஆம் தேதி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருப்பதன் காரணமாக அன்றும் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை தான்.

அதைப்போல சென்னையில் வருகின்ற ஏப்ரல் 21ஆம் தேதி மஹாவீர் ஜெயந்தி மற்றும் மே 1ஆம் தேதி தொழிலாளர் தினம்  கொண்டாடப்பட இருப்பதன் காரணமாக இந்த தேதிகளிலுமே டாஸ்மாக் கடைகள் இயங்காது என்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்து இருக்கிறார்.

மேலும், மக்களவை தேர்தல் நாளை முன்னிட்டு தமிழகத்தில் 3 நாட்களுக்கு தொடர்ச்சியாக  டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், பல மாவட்டங்களில் நேற்றே மதுக்கடையில் கூட்டமாக மது பிரியர்கள். நிரம்பி வழிந்தனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் கூட்டமாக வரிசையில் நின்று மதுவை வாங்கி சென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்