10,11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்க உத்தரவு.!
10, 11-ம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டுத் தேர்வில் மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் தேர்ச்சி வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. மேலும், மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளின் அடைப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
தற்போது, மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கும் பணியில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட கல்விஅலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், 10, 11-ம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டுத் தேர்வில் எத்தனை மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் தேர்ச்சி வழங்க அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தேர்வுத்துறை இயக்குனர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.