6 வேட்பாளர்களும் போட்டியின்றி மாநிலங்களவைக்கு தேர்வாகின்றனர்
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வாகின்றனர்.
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூலை 18 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.
ஆனால் தேசத்துரோக வழக்கின் தண்டனை காரணமாக மாநிலங்களவை தேர்தலில் வைகோவின் வேட்புமனு ஏற்கப்படுமா?இல்லையா ?என்ற கேள்வி வெகுவாக எழுந்து வந்தது.இதனால் திமுக சார்பில் 3-வது வேட்பாளராக என் .ஆர். இளங்கோ வேட்புமனு தாக்கல் செய்தார்.பின் வைகோவின் மனு ஏற்கப்பட்டதால் திமுகவின் என்.ஆர்.இளங்கோ தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றார். திமுகவின் என்.ஆர்.இளங்கோ வேட்பு மனுவை திரும்ப பெற்றதால் 6 வேட்பாளர்களும் போட்டியின்றி மாநிலங்களவைக்கு தேர்வாகின்றனர்.
போட்டியின்றி தேர்வாகும் திமுக வேட்பாளர்கள்:
- சண்முகம்
- வில்சன்
- வைகோ
போட்டியின்றி தேர்வாகும் அதிமுக வேட்பாளர்கள்:
- முஹம்மத் ஜான்
- சந்திரசேகரன்
- அன்புமணி