தமிழினம் அனைத்திலும் வெற்றி வாகை சூடட்டும்-முதலமைச்சர் பழனிசாமி
தமிழினம் அனைத்திலும் வெற்றி வாகை சூடட்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நமது பாரம்பரிய விழாக்களில் சில மறக்கப்பட்டாலும், சில விழாக்கால இன்றும் நமது தமிழ் மக்களால் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு தான் வருகிறது. அந்த விழாக்களில் ஒன்று தான் தமிழ் புத்தாண்டு.நாளை தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவரது வாழ்த்து செய்தியில் ,தமிழ் புத்தாண்டு மலர்கின்ற இனிய நாளில் தமிழ் மக்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். தமிழ் மக்கள் பன்னெடுங்காலமாய் சித்திரை முதல் நாளை தமிழ்புத்தாண்டாக கொண்டாடி மகிழ்கிறார்கள் .தமிழர்களின் இல்லங்களில் நலமும், வளமும் பெருகட்டும் . தமிழினம் அனைத்திலும் வெற்றி வாகை சூடட்டும் என்று தெரிவித்துள்ளார்.
தொன்மையிலும், பன்முகத் தன்மையிலும் ஈடு இணையில்லா பண்பாட்டுப் பெருமை கொண்ட தமிழ்ப் பெருமக்கள் கொண்டாடி வரும் சித்திரை முதல் நாளாம் தமிழ் புத்தாண்டில் அனைவர் வாழ்விலும் நலமும் வளமும் பெருகிட வாழ்த்தி, எனது மனமார்ந்த “தமிழ்ப் புத்தாண்டு” வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/4Nsiwd6Dsh
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) April 13, 2020