மதுரையில் அமலுக்கு வந்த பொதுமுடக்கம்..எதற்க்கெல்லாம் அனுமதி, தடை?

மதுரையில் ஏற்கனவே ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், தற்பொழுது கூடுதல் கட்டுப்பாடுகளுடன் மீண்டும் அமலுக்கு வந்தது.
மதுரையில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்து வருகிறது. இதனால் ஒரே நாளில் 137 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு பாதிப்பு எண்ணிக்கை 988 ஆக அதிகரித்துள்ளது. அதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், கொரோனா பாதிப்பு தீவிரமடைவதை அடுத்து, அங்கு ஊரடங்கு அமலுக்கு வந்தது. அதில் மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதன்காரணமாக, மதுரையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அந்த மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படவுள்ளது
இவைக்கெல்லாம் அனுமதி:
- அத்தியாவசிய பொருட்கள் வாங்க 1 கிலோமீட்டர் தூரத்திற்குள்ளாவாகவே மட்டுமே நடந்து செல்லவேண்டும்.
- உணவகங்களில் காலை 6 மணிமுதல் இரவு 8 மணிவரை பார்சல் சேவை வழங்க அனுமதி.
- அம்மா உணவகம் இயங்க அனுமதி.
- காய்கறி, பலசரக்கு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க காலை 6 மணிமுதல் மதியம் 2 மணிவரை கடைகள் இயங்கும்.
- ரயில், விமானம் மூலம் வருபவர்கள் இ-பாஸ் மூலம் வர அனுமதி.
- தகவல் தொடர்ப்பு அலுவலகம் 5% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.
- மத்திய அரசு அலுவலங்கள், வங்கிகள் 33% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.
இவைக்கெல்லாம் தடை:
- ஆட்டோ, டாக்ஸி, தனியார் வாகனங்கள் உள்ளிட்டவை இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
- ஞாயிற்றுக்கிழமைகளில் பால் மற்றும் மருந்து கடைகளை தவிர்த்து அனைத்து கடைகள் மூடப்படும்.
- டீ கடைகள் இயங்க அனுமதி இல்லை.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
“அந்த பையனுக்கு பயம் இல்ல” கிரிக்கெட் உலகத்தை திரும்பி பார்க்க வைத்த வைபவ்.! மொட்டை மாடி பயிற்சி வீடியோ.!
April 29, 2025
வைரல் வீடியோ: பஹல்காம் தாக்குதலுக்கு ஜிப்லைன் ஆப்ரேட்டர் காரணமா? சுற்றுலா பயணி அளித்த ஆதாரம்.!
April 29, 2025
தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!
April 29, 2025
குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!
April 28, 2025