தமிழகத்தில் நிபா பரவாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை- அமைச்சர் விஜயபாஸ்கர்
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
தமிழகத்தில் நிபா பரவாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் நிபா வைரஸ் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், கேரள எல்லை ஓரம் இருக்கும் பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் நிபா வைரஸ் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், கேரள எல்லை ஓரம் இருக்கும் பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,தமிழகத்தில் நிபா பரவாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. நிபா வைரஸ் வௌவால்கள் மூலம் பரவுவதால் பழங்களை நன்கு கழுவி சாப்பிடவேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.