வெளியூர் செல்ல இனி 4 நாட்களுக்கு இதற்கெல்லாம் மட்டும் தான் அனுமதி பாஸ்
சென்னையிலிருந்து வெளியூர் செல்ல அனுமதி பாஸ் இறப்பு, மருத்துவ தேவைக்கு மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள சமயத்தில் இதர தேவைகளுக்காக பாஸ் வழங்கும் நடைமுறை இருந்து வந்தது.இன்று முதல் சென்னையில் புதன்கிழமை வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனவே சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அதாவது இன்று முதல் புதன்கிழமை வரை இறப்பு மற்றும்
மருத்துவ தேவைகளுக்காக மட்டுமே வெளியூர் செல்லும் நபர்களுக்கு அனுமதி பாஸ் வழங்கப்படும். மற்ற தேவைகளுக்காக வழங்கப்படாது.இன்று முதல் 4 நாட்களுக்கு அனுமதி பாஸ்
வழங்கப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.