ப்ளஸ் 2 தேர்வு குறித்து அனைத்துக் கட்சி பிரதிநிதிகளிடம் இன்று நண்பகல் 12 மணிக்கு காணொளிமூலம் கருத்துக்கேட்பு நடைபெறும்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அதிகாரிகளுடனான சந்திப்பிற்கு பிறகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பிளஸ் டூ தேர்வு விவகாரத்தில் முதன்மை கல்வி அலுவலர்கள் மாறுபட்ட கருத்தைத் தெரிவித்துள்ளனர். பிளஸ் டூ தேர்வு குறித்து மருத்துவ நிபுணர்கள், உளவியல் நிபுணர்களுடன் ஆலோசனை பெற உள்ளது.
ப்ளஸ் 2 தேர்வு குறித்து அனைத்துக் கட்சி பிரதிநிதிகளிடம் இன்று நண்பகல் 12 மணிக்கு காணொளிமூலம் கருத்துக்கேட்பு நடைபெறும் என தெரிவித்தார். மேலும், பிளஸ் டூ தேர்வு குறித்து பெற்றோர்கள், கல்வியாளர்கள் தரப்பிலிருந்து பல்வேறு ஆலோசனைகள் வந்துள்ளன.
தேர்வை நடத்தவில்லை எனில் மேற்படிப்பிற்கு மாணவர்கள் எப்படி செல்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்வை நடத்துவதா..? இல்லையா..? என்பது குறித்து முதலமைச்சர் நல்ல முடிவு எடுப்பார். திடீரென நீட் தேர்வு நடந்தால் பயிற்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே சாதகமாக அமையும் என்ற கருத்தும் எழுந்துள்ளது என அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…
சென்னை : அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே அந்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறதோ அதே…
சென்னை : திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2019 நாடாளுமன்ற தேர்தல் முதல் தற்போது வரையில் திமுக கூட்டணியில்…
ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ஆம் தேதி நடைபெறுகிறது. ஏற்கனவே, இரு அணிகளும் 5 போட்டிகள் மோதிக்கொள்ளும்…
தூங்கும்போது குப்புறபடுத்து தூங்குவதால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் பற்றி மருத்துவர்கள் கூறியதை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை…