முதலமைச்சர் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் கலந்தாலோசிக்க வேண்டும்-திருமாவளவன்
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்வை இழந்து தவித்து வருகின்றனர். இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 40-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
கொரோனா நோய்த் தடுப்பில் மாநிலம் முழுவதும் நிலவும் உண்மை நிலையை அறிந்து நடவடிக்கைகள் எடுக்க காணெலி மூலம் அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தை முதலமைச்சர் கூட்ட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.இதனை போலவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி உள்ளிட்டோர் நடத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.
<
இப்படியான பேரிடர் காலத்தில் வெளிப்படைத் தன்மையும், அனைவரையும் உள்ளடக்கிய திட்டமிடலுமே மக்களைக் காக்க உதவும்.
எனவே, தமிழக முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் கலந்தாலோசிக்க வேண்டும்.@CMOTamilNadu @mkstalin #Thirumavalavan #Lockdown21 pic.twitter.com/F8MjNcDWIy— Thol.Thirumavalavan (@thirumaofficial) March 28, 2020
/p>
இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,இப்படியான பேரிடர் காலத்தில் வெளிப்படைத் தன்மையும், அனைவரையும் உள்ளடக்கிய திட்டமிடலுமே மக்களைக் காக்க உதவும். எனவே, தமிழக முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் கலந்தாலோசிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.