இன்று அனைத்து கட்சி கூட்டம்..! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!
நீட் தேர்வு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில், பேரவை விதி எண் 110ன் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நீட் தேர்வு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்திருந்தார்.
அதன்படி, சென்னை தலைமை செயலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், காலை 10:30 மணியளவில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், கூட்டத்தில் கலந்துகொள்ள சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.