விவசாயிகள் மசோதா தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் -திமுக அறிவிப்பு
திமுக தலைமையில் நாளை மறுநாள் அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்ட விவசாயிகள் தொடர்பான, அத்தியாவசிய பொருட்கள் மசோதா 2020, விலைவாசி தொடர்பான விவசாயிகள் அதிகாரம் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்த மசோதா 2020 மற்றும் விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம் மசோதா 2020 ஆகிய 3 மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், ‘விவசாயிகளுக்கு விரோதமாக பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ள 3 சட்டங்கள்’ குறித்து அனைத்துக்கட்சிக் கூட்டம் 21-09-2020 அன்று காலை 10 மணிக்கு சென்னை – அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது” என்று கட்சித் தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள 3 சட்டங்கள் குறித்து விவாதிக்க திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் வரும் 21-ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் – திமுக #dmk | #MKStalin pic.twitter.com/M2IT0CS52T
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) September 19, 2020