டிசம்பர் 4 ஆம் தேதி திருச்சியில் போராட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேகதாதுவில் மத்திய அரசு கர்நாடக மாநிலத்துக்கு அணை கட்ட ஒப்புதல் அளித்துள்ளதையடுத்து , மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்று திராவிட முன்னேற்றக்கழகம் சார்பில் அனைத்து கட்சி கூட்டமானது இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.இதில் மதிமுக , விசிக , சிபிஐ , சிபிஐஎம் , காங்கிரஸ் , மமக உள்ளிட்ட திமுகவின் தோழமை கட்சிகள் பங்கேற்றன.
அதே போல இந்திய யூனியன் முஸ்லீம் லீக்-கும் , மனித நேய மக்கள் கட்சி-யும் பங்கேற்றுள்ளது.தோழமை கட்சியின் தலைவர்களான வைகோ , திருநாவுக்கரசர் , முத்தரசன் , தொல்.திருமாவளவன், பாலகிருஷ்ணன் அப்துல் சமத் , வீரபாண்டியன் அதேபோல திமுகவின் துரை முருகன் ,DR.பாலு அண்ணா ஆகியோர் பங்கேற்றனர்.
இதன் பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில்,மேகதாது அணை விவகாரத்தில் திமுக மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் டிசம்பர் 4 ஆம் தேதி திருச்சியில் போராட்டம் நடத்தப்படும்.மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தோழமைக் கட்சிகளுடன் விவாதிக்கப்பட்டது, போதிய நேரமில்லாததால் மற்ற கட்சிகளை அழைக்க முடியவில்லை.மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு உடனடியாக சட்டசபையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.அனைத்து கட்சியினரும் பங்கேற்க வேண்டும்.அதேபோல் பாஜகவும் போராட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கிறேன்.
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…