27-ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்!
27-ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில், வரும் 27-ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டமானது அதிமுக அரசின் கொரோனா பேரிடர்கால மோசடிகள் மற்றும் நிர்வாகத்தோல்விகள் தொடர்பாக காணொளி காட்சி மூலம் நடைபெறும் என திமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
“கழக தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில், அதிமுக அரசின் கொரோனா பேரிடர்கால மோசடிகள் & நிர்வாகத்தோல்விகள் தொடர்பாக, 27/07/2020 அன்று காணொலி வாயிலாக அனைத்து கட்சி கூட்டம்”
– தலைமைக் கழக அறிவிப்பு.#DMK pic.twitter.com/5H5KWE2qtH
— DMK (@arivalayam) July 24, 2020