சென்னையில் இன்று அனைத்துக்கட்சிக் கூட்டம்..!
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இன்று அனைத்துக்கட்சிக் கூட்டம் பகல் 12 மணிக்கு தொடங்கவுள்ளது.
தமிழக்தில் புதிதாக அமைக்கப்பட்ட வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் விரைவில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதிக்குள் தமிழகத்தில் விடுபட்ட மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதனைத்தொடர்ந்து, 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. சமீபத்தில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மேலும், கொரோனா காரணமாக காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், தமிழகத்தில் விரைவில் தேர்தல் நடைபெறும் என கூறப்படுகிறது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இன்று அனைத்துக்கட்சிக் கூட்டம் பகல் 12 மணிக்கு தொடங்கவுள்ளது.