#BigNews:இன்று முதல்வர் பழனிசாமி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்
ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடர்பாக ஆலோசிக்க இன்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு முதல்வர் பழனிசாமி அழைப்பு.
சென்னையில் இன்று முதல்வர் பழனிசாமி தலைமையில் தலைமை செயலகத்தில் வைத்து காலை 9.15 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது.ஆக்சிஜன் உற்பத்தி செய்ய சம்பந்தமான ஸ்டெர்லைட் ஆலை வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில்,அது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதல்வர் பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் இரண்டாவது அலை காரணமாக பல மருத்துவமனைகளில் தற்போது ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதிக்க கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
மத்திய அரசு வழக்கறிஞர் ஆக்சிஜன் உற்பத்திக்காக அனுமதிக்கலாம் என்று தெரிவித்தார்.இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தது,அதற்கு உச்சநீதிமன்றம் ஆக்ஸிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே ஏற்று நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் யோசனை கூறியிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில் ஸ்டெர்லைட் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் கூடுதல் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.அதில் தமிழக அரசு ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்க கூடாது என்றும் அவ்வாறு அனுமதித்தால் ஏதேனும் ஆபத்து ஏற்படலாம் என்று தெரிவித்துள்ளது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நடக்கயிருக்கும் அனைத்து கட்சி கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.