#BREAKING: முதலமைச்சர் தலைமையில் அனைத்துக்கட்சி குழு அமைப்பு..!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த எம்எல்ஏக்கள் ஆலோசனை வழங்க அனைத்துக்கட்சி குழு அமைக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்புப் பணிகளை கண்காணிக்க முதலமைச்சர் தலைமையில் 13 கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானத்தின் படி முதலமைச்சர் தலைமையில் அனைத்துக்கட்சி குழு அமைப்பில் 13 கட்சிகளின் சார்பில் தலா ஒரு எம்எல்ஏ நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆலோசனை குழு கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து அவ்வப்போது கூடி ஆலோசிக்கும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக – எழிலன்,
அதிமுக – சி.விஜயபாஸ்கர்,
பாஜக – நயினார் நாகேந்திரன்,
பாமக – ஜி.கே.மணி உள்ளிட்ட 13 கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் நியமனம் செய்யபப்ட்டுள்ளனர்.