அனைத்து கட்சிகளும் பாஜகவுக்கு பகையாளிகள் தான்..! அண்ணாமலை பேட்டி..
ஊழல் விவகாரத்தில் நண்பர்கள் எதிரிகள் என்றெல்லாம் நான் பார்க்கவில்லை என்று அண்ணாமலை கூறினார்.
தமிழக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு திருச்சி விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அதில், மக்கள் வரிப்பணத்தில் யார் ஆட்சியில் இருக்கிறார்களோ, எங்களைப் பொருத்தவரை யார் ஊழல் செய்கிறார்களோ அவர்களுடைய பட்டியலை வெளியிடுவதே நியாயம் எனக் கூறியுள்ளார்.
மேலும், ஊழல் விவகாரத்தில் நண்பர்கள், எதிரிகள் என்றெல்லாம் நான் பார்க்கவில்லை. இந்த விவகாரத்தில் நாங்கள் யாரையும் பங்காளிகள் என்று கூறவில்லை, எல்லோருமே பகையாளிகள் தான். யார் ஊழல் செய்திருக்கிறார்களோ அவர்களை பாரதிய ஜனதா கட்சி பகையாளிகளாக தான் பார்க்குமே தவிர பங்காளிகளாக பார்க்காது என்று கூறினார்.
முன்னதாக, சென்னையில் உள்ள கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவினர் சொத்து பட்டியலை வெளியிட்டார். இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.