நாடாளுமன்ற விவாதங்கள் அனைத்தும் அர்த்தமற்றவை – கார்த்தி சிதம்பரம்!
நாடாளுமன்றத்தில் விவாதிக்கபடுகின்ற அனைத்துமே அர்த்தமற்றவை என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் குறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நாடாளுமன்றத்தில் நடக்கக் கூடிய அனைத்து விவாதங்களுமே அர்த்தமற்றவை. உங்கள் வாதம் எவ்வளவு நம்பத் தகுந்ததாக இருந்தாலும் அடுத்த பக்கத்தில் இருப்பவர்கள் யாரும் அதை உறுதியாக நம்ப மாட்டார்கள்.
வாக்களிப்பு கட்சி அடிப்படையில் கண்டிப்பாக உள்ளது என்றாலும், அரசாங்கத்திற்கு பெரும்பான்மை உள்ளது, எனவே அது முன்மொழியும் எந்த மசோதாவும் வெற்றி பெறும். அனைத்து உரைகளும் நாடாளுமன்றத்தில் பேசப்படக் கூடிய அனைத்து வாதங்களும் கேலரிக்காகவும், மீடியாக்களுக்காகவும், சமூக வலைதளங்களுக்காகவும் தான் இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,
All debates in this Parliament are pointless. No matter how persuasive your argument is, no one from the other side is going be convinced. Voting is strictly along party lines. The Govt has a big majority, anything it proposes will pass. All speeches are for the gallery/media/SM
— Karti P Chidambaram (@KartiPC) September 17, 2020