MBBS படிப்புக்கு மத்திய அரசின் பொது கலந்தாய்வு.! வலுக்கும் எதிர்ப்பு.!
நாடு முழுவதும் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் MBBS கலந்தாய்வை மத்திய அரசே நடத்தும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது .
தேசிய மருத்துவ ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வரும் மருத்துவ கல்லூரிகளில் உள்ள பொதுமருத்துவம் மற்றும் பல் மருத்துவம் இளங்கலை படிப்பிற்கான மாணவர் சேர்க்கையை இனி வரும் கல்வியாண்டில் தேசிய இளங்கலை கல்வி வாரியம் தான் நடத்தும் என அறிவிய்ப்பு வெளியானது.
முன்னதாக, மாநில அரசு கல்லூரிகளில் உள்ள மருத்துவ படிப்பிற்கான காலிப்பணியிடங்களில் 85 சதவீததையும், தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களையும், நிகர் நிலை கல்லூரிகளில் உள்ள மருத்துவ இளங்கலை மாணவர் சேர்க்கையை அந்தந்த மாநில அரசுகள் கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கையை உறுதி செய்து வந்தனர். மீதம் உள்ள இடங்களில் (அரசு கல்லூரிகளில் உள்ள 15 சதவீத இடம் போல) மத்திய அரசு கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்தியது.
மதினா அரசு அறிவித்த 100 சதவீத மருத்துவ கலந்தாய்வு உத்தரவுக்கு பல்வேறு எதிர்ப்புகள் உருவாகின. தமிழக அரசு சார்பில் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னர் அறிவித்து இருந்தார்.
தற்போது இன்று முதல் நாடு முழுவதும் MBBS கலந்தாய்வு மற்றும் இளங்கலை பல் மருத்துவ கலந்தாய்வை மத்திய அரசே முழுதாக நடத்தும் என மீண்டும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு மீண்டும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.