தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ சோதனை!

NIA RAID

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்.ஐ.ஏ) சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கோவையில் 2 இடங்கள், சென்னை, திருச்சி, சிவகங்கை மற்றும் தென்காசியில் தலா ஒரு இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதில், திருச்சி சண்முகா நகரில் உள்ள நாதக நிர்வாகி சாட்டை துரைமுருகன் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபோன்று, சிவகங்கையில் தென்னகம் என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த விஷ்ணு பிரதாப் வீடு, தென்காசியில் சிவகிரி அருகே நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் இசை மதிவாணன் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது.

தமிழகத்திற்கு ஏன் ஓரவஞ்சனை.? கருப்பு சின்னம் அணிந்து போராட்டம்.! முதல்வர் அறிவிப்பு.!

மேலும், கோவை ஆலாந்துறை ஆர்.ஜி. நகரில் முன்னாள் நிர்வாகி ரஞ்சித்குமார், கோவை காளப்பட்டி பகுதியில் முருகன் ஆகியோர் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. வெளிநாட்டில் இருந்து நிதி பெறுவது தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

இதனிடையே, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த முத்துப்பேட்டை இடும்பாவனம் கார்த்தி ஆஜராக என்.ஐ.ஏ அதிகாரிகள்  சம்மன் அனுப்பியுள்ளனர். இன்று காலை சென்னையில் உள்ள என்.ஐ. அலுவலத்தில் இடும்பாவனம் கார்த்தி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வெளியூரில் இருப்பதால் 5-ஆம் தேதி ஆஜராவதாக இடும்பாவனம் கார்த்தி பதில் அளித்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்