தமிழகத்தில் இன்று பேருந்துகள் இயங்காது – வெளியான அதிரடி அறிவிப்பு!

Published by
Edison

தமிழகம் முழுவதும் இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் பகல், இரவு நேரங்களில் ஆம்னி பேருந்துகள் இயங்காது என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு.

தமிழகம் முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில்,இரவு நேர ஊரடங்கு மற்றும் கடந்த 2 வாரங்களாக வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இதனைத்தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.ஏற்கனவே இரவுநேர ஊரடங்கு உள்ள நிலையில்,நேற்று இரவு 10 மணி முதல் திங்கள் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும்,இன்று முழு ஊரடங்கில், பொதுப் போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில் சேவை இயங்காது என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், வெளியூர்களிலிருந்து வரும் பயணிகளின் நலன் கருதி,சென்னை சென்ட்ரல், எழும்பூர் இரயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் போன்ற இடங்களில் வழக்கமான ஆட்டோக்கள் இயக்கப்படும். செயலி மூலம் முன்பதிவு செய்து இயக்கப்படும் வாடகை கார்கள் பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில்,தமிழகத்தில் இன்று(ஞாயிறு) முழு ஊரடங்கு என்பதால் ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.ஆனால்,நாளை (ஜன.24) முதல் வழக்கம்போல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

Recent Posts

ஏப்ரல் 17-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்.., முக்கிய ஆலோசன.!

ஏப்ரல் 17-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்.., முக்கிய ஆலோசன.!

சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வருகின்ற ஏப்ரல் 17ம் தேதி அன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் சென்னை…

19 minutes ago

பார்ம் சரியில்லை ரோஹித் சர்மாவை தூக்குங்க! அஞ்சூம் சோப்ரா பேச்சு!

மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி விவரப்பட்டியலில் 8-வது இடத்தில் இருப்பது என்பது ரசிகர்களுக்கு ஒரு…

31 minutes ago

முர்ஷிதாபாத் முழுக்க தீ எரிகிறது…மம்தா சும்மா இருக்காரு! யோகி ஆதித்தியநாத் சாடல்!

உத்திர பிரதேஷ் : மாநிலம் ஹர்தோய் நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் யோகி ஆதித்தியநாத் மேற்கு…

2 hours ago

பக்தர்களே ரெடியா: மே 8-ல் மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்.! வெளியானது முக்கிய அறிவிப்பு..,

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…

2 hours ago

நயினார் நாகேந்திரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் வாழ்த்து.!

சென்னை : இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் மாநில சுய ஆட்சி குறித்த முக்கிய தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து…

2 hours ago

நான் வரவில்லை என்னை விடுங்க! ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய ஆடம் ஸம்பா!

ஹைதராபாத் : வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும்…

2 hours ago