“தமிழகத்தில் மறு உத்தரவு வரும் வரை இவர்களுக்கு எல்லாம் தடை” முதல்வர் அதிரடி!

Default Image

தமிழகத்தில் மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். அந்த நிலையில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு வரைமுறைகளுடனும், தளர்வுகளுடன் நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார். இந்நிலையில் கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருப்பதாக தெரிவித்தார்.

அந்த வரிசையில்,

1. பள்ளிகள் கல்லூரிகள் பயிற்சி நிறுவனங்கள் ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள்.

2. வழிபாட்டுத் தலங்கள் பொதுமக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள்.

3. பொதுமக்கள் அதிகளவில் கூடும் திரையரங்குகள், கேளிக்கை கூடங்கள், மதுக்கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், கடற்கரை, சுற்றுலா தளங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு அரங்குகள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்ற இடங்கள்.

4. அனைத்து வகையான சமய சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு கல்வி கலாச்சார நிகழ்வுகள், விழாக்கள் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்.

5. பொதுமக்களுக்கு விமானம், ரயில், பேருந்து போக்குவரத்து மாநிலங்களுக்கு இடையான ரயில் போக்குவரத்து, சென்னை மாநகரத்தில் இருந்து பிற பகுதிக்கான ரயில் போக்குவரத்து ஆகியவற்றுக்கு அனுமதி கிடையாது. (மத்திய மாநில அரசின் சிறப்பு அனுமதி பெற்று இயக்கப்படும் விமானம் ரயில் பொதுப்பேருந்து போக்குவரத்து மற்றும் அனுமதி)

6. டாக்ஸி ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா.

7. மெட்ரோ ரயில் / மின்சார ரயில்.

8. தங்கும் விடுதிகள், (பணியாளர் விடுதிகளை தவிர) தங்கம், ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள்.

9. இறுதி ஊர்வலங்களில் 20 நபருக்கு மேல் பங்கேற்கக் கூடாது

10. திருமண நிகழ்ச்சிகளுக்கு தற்பொழுதுள்ள நடைமுறைகள் தொடரும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்