அனைத்து அரசு துறைகளிலும் ‘தமிழ் யூனிகோட்’ முறையை கையாள வேண்டும் – தலைமை செயலாளர் இறையன்பு
தலைமை செயலாளர் இறையன்பு அவர்கள், அனைத்து அரசுத் துறைகளிலும் தமிழ் யூனிகோட் முறையை கையாள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தலைமை செயலாளர் இறையன்பு அவர்கள், அனைத்து அரசுத் துறைகளிலும் தமிழ் யூனிகோட் முறையை கையாள வேண்டும் என்றும், இதற்கு முன்பாக பயன்படுத்தப்பட்டதை விட மேம்பட்டதாக இருப்பதால் இதை பயன்படுத்துவதில் சிரமம் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அனைத்து அரசு துறை செயலாளர்களுக்கு சுற்றறிக்கையும் அனுப்பி உள்ளார்.
அந்த சுற்றறிக்கையில், தமிழக இணைய கல்வி கழகம் மேம்படுத்தியுள்ள தமிழ் யூனிகோட் வகை தமிழ் குறிஅமைவு(1ACE16) கொண்ட எழுத்துருக்கள், விசைப்பலகை செலுத்துகைகள் ஆகியவற்றுக்கு தமிழக தகவல்தொழில் நுட்பத்துறை ஆணை 5இன்படி, அனுமதி அளித்து வெளியிட்டுள்ளது. இவை இலவசமாக கிடைக்கும்.
மேலும், தகவல் தொழில் நுட்பத் துறையின் கடிதம் எண் 3,973ன்படி, அனைத்து அரசு துறைச் செயலாளர்கள், மற்றும் துறையின் தலைவர்கள் ஆகியோர். வானவில், அவ்வையார் எழுத்துருக்களுக்கு பதிலாக மேற்கண்ட தமிழ் யூனிகோட் எழுந்துருவை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து அனைத்து அரசுத்துறைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி இதுவரை வானவில், அவ்வையார் போன்ற எழுத்துருக்களைத் தான் தினசரி பணிகளில் பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது. இதற்கு காரணம் அந்த எழுத்துருக்களை யூனிகோட்டுக்கு மாற்றி அமைக்கின்ற கருவிகள் இல்லாமையால் மேற்கண்ட எழுத்துருக்களை பயன்படுத்தும் நிலையில் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
எனவே டிவிஏ மேம்படுத்தியுள்ள தமிழ் யூனிகோட் மாற்றி அமைக்கும் கருவி, தமிழ் பூனிகோட் எழுத்துரு ஆகியவை htip/www.lamivi.org என்ற இணையதளத்தில் இவைசமாக கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அந்த அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.