இன்று முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளும் இயங்கலாம் – வெ.இறையன்பு!
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளும் இன்று முதல் இயங்கலாம் என தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளும் இன்று முதல் இயங்கலாம் என தலைமை செயலாளர் வெ.இறையன்பு அவர்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மே 24 திங்கள் கிழமை அதிகாலை நான்கு மணி வரை தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அமலில் இருந்ததாகவும், திங்கள்கிழமை காலை 6 மணி முதல் தளர்வுகளற்ற பொது முடக்கம் அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தளர்வுகள் இல்லாமல் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டாலும் சில செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதன்படி ஏ.டி.எம், வங்கி சார்ந்த சேவைகள் தொடர்ந்து மேற்கொள்ளலாம் மற்றும் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனத்தை சேர்ந்த அலுவலகங்கள் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களுடன் செயல்படலாம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் நியாயவிலை கடைகள் செவ்வாய்க்கிழமை முதல் இயங்க அனுமதி அளிக்கப்படுவதாகவும், தினமும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை செயல்படும் எனவும் தலைமைச் செயலாளர் இறையன்பு அவர்கள் வெளியிட்டுள்ள உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் காலை 8 மணி முதல் 12 மணி வரை நியாய விலைக்கடைகள் இயங்க அனுமதி..! pic.twitter.com/WpqgfFJapW
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) May 24, 2021