5,318 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை வெளியிட்டு இருந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பாணை ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார மின்வாரியத்தில் இளநிலை உதவியாளர், உதவி பொறியாளர், கள உதவியாளர், உதவி கணக்கு அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள 5,318 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த அறிவிப்பானை தற்போது ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருந்த தேர்வுகள் கொரோனா தொற்று, சட்டப்பேரவை தேர்தல் காரணங்களால் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சட்டப்பேரவையில் சமீபத்தில் அனைத்து அரசு நிறுவனங்களின் ஆள்சேர்ப்பையும் டிஎன்பிஎஸ்சி மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மின்சாரவாரிய ஆள்சேர்ப்பு அறிவிப்பாணைகள் ரத்து செய்யப்படுவதாகவும், கணினி வழி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது என்றும், விண்ணப்பித்தவர்களுக்கான கட்டணங்கள் திருப்பி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…