தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் உறுதி.
தமிழக சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது திமுக அரசு அளித்த வாக்குறுதிகள் என்ன நிலை ஏன் நிறைவேற்றப்படவில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுகவைச் சேர்ந்த உறுப்பினர் ஒரு பெரிய பட்டியலை வரிசைப்படுத்தி, இதையெல்லாம் தேர்தல் அறிக்கையிலே சொன்னீர்களே, ஏன் செய்யவில்லை என்று கேட்கிறார். நீங்கள் தொடர்ந்து இரண்டு முறை, அதாவது 10 வருடங்கள் ஆட்சியில் இருந்தீர்கள்.
நீங்கள் தேர்தல் அறிக்கையில் சொன்னதையெல்லாம் முழுமையாக செய்து முடித்து விட்டீர்களா?அப்படிச் செய்து முடித்திருந்தால், சொல்லுங்கள். பல வாக்குறுதிகளை நீங்கள் அந்த 10 வருடங்களில் நிறைவேற்றவேயில்லை. ஆதாரங்கள் இருக்கின்றன. அது மக்களுக்கும் நன்றாகத் தெரியும்.
நான் இப்போது சொல்கிறேன். நாங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கக்கூடிய வாக்குறுதிகளை உறுதிமொழிகளை, அதிலும் குறிப்பாக இந்த 10 மாதங்களில், நாங்கள் செய்திருக்கக்கூடிய சாதனைகளைப் போல் எந்த ஆட்சியிலும் செய்யவில்லை என்பதை நான் உறுதியோடு சொல்ல முடியும்.
எனவே, விரைவிலே, நீங்கள் என்னென்ன வாக்குறுதிகளைக் கேட்டிருக்கிறீர்களோ, அவற்றையெல்லாம் பட்ஜெட்டிலும் சொல்லியிருக்கிறோம். எனவே. நிச்சயாக, உறுதியாக, படிப்படியாக அவை நிறைவேற்றப்படும். அதுதான் எங்களுடைய இலட்சியம், அதுதான் எங்களுடைய கொள்கை என முதல்வர் தெரிவித்தார்.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…
சென்னை : நேஷனல் கவுன்சில் ஆஃப் எஜுகேஷனல் ரிசர்ச் அண்ட் ட்ரெய்னிங் (NCERT) அமைப்பு, இந்தியாவில் பள்ளிக் கல்விக்கான பாடநூல்களை…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
சென்னை : மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து துரை வைகோ விலகுவதாக அறிவித்துள்ளார். அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக உள்ள மல்லை…
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை கொச்சி போலீசார் கைது செய்துள்ளனர். சமீபத்தில்,…