அனைத்துமே நாடகம்., இதை இப்படி செய்தால் மட்டுமே உண்மையை அறிய முடியும் – திருமாவளவன்

Default Image

தமிழக அரசின் இடஒதுக்கீடு, கடன் தள்ளுபடி அனைத்துமே தேர்தல் நாடகம் என்று விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், வன்னியர் சமுதாயத்திற்கு 20% உள் ஒதுக்கீடு கேட்ட பாமக நிறுவனர் ராமதாஸ் 10.5% வழங்கியதற்கு ஒப்புக்கொண்டுள்ளார். அப்படியென்றால் மீதமுள்ள 9.5% மக்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாம் என்ற முடிவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வந்துவிட்டாரா? என்றும் இது எந்த அடிப்படையில் ஒப்புக்கொள்ளப்பட்டது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தேர்தலுக்காக செய்யப்பட்ட ஒன்றாக தான் தெரிகிறது. தேர்தல் நாடகமாகத் தான் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் கடன் தள்ளுபடி அறிவிப்புகள் கூட அறிவிப்புகளாகவே உள்ளது. எனவே, அனைத்தும் தேர்தல் நாடகம் என்றே கருத வேண்டியிருக்கிறது என விமர்சித்துள்ளார். சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தினால் தான், ஒவ்வொரு சமூகமும் எத்தனை சதவீதம் இருக்கிறார்கள் என்பதை ஆதாரப்பூர்வமாக நம்மால் அறிய முடியும். அதன் அடிப்படையில் வேண்டுமானால் உள் ஒதுக்கீடு வழங்கினால், சமூகநீதி அடிப்படையில் செய்யப்பட்ட ஒன்றாக இருக்கும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்