மேலும் 3 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம்! – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!
அறநிலையத்துறை சார்பில் மேலும் 3 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடக்கம்.
தமிழ்நாட்டில் அறநிலையத்துறை சார்பில் மேலும் 3 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் அங்கும் திட்டத்தை காணொலி மூலம் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின். அதன்படி, ராமேஸ்வரம் (ரங்கநாத சுவாமி), திருவண்ணாமலை (அருணாச்சலேஸ்வரர்), மதுரை (மீனாட்சி) ஆகிய கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.