அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம் : 58 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் கீழ், 58 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சென்னை ஆர்.டி.எம். புரத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் இந்து சமய அறநிலையத்துறைஅமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் கே.என். நேரு, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த நிகழ்வில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பயிற்சி முடித்த 24 அர்ச்சகர்கள் உட்பட 58 அர்ச்சகர்களும் பணி நியமன ஆணை வழங்கினார். அதன்படி, இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.