அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு இலவசம் – செல்லூர் ராஜு கோரிக்கை
வயதானவர்கள் பேருந்தில் ஏறியபின் கட்டண பேருந்தாக இருந்தால் இறக்கிவிடப்படுகின்றன என செல்லூர் ராஜு பேரவையில் பேச்சு.
தமிழகத்தில் அனைத்து பேருந்துகளிலும் மகளிர்க்கு கட்டணம் இல்லை என முதல்வர் முக ஸ்டாலின் அறிவிக்க வேண்டும் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சரும், நடப்பு எம்எல்ஏவுமான செல்லூர் ராஜு சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்துள்ளார். வயதானவர்கள் பேருந்தில் ஏறிய பின் கட்டண பேருந்தாக இருந்தால் இறக்கிவிடப்படுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின் படி, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் பதவியை பொறுப்பேற்ற அன்றே தினமே 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார் முக ஸ்டாலின். அதில், மாநகரில் ஓடும் சாதாரண கட்டண பேருந்துகளில், பெண்களுக்கு இலவச பயணம் திட்டம் அமல்படுத்தப்பட்டது. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.