இனி வாரத்தில் 6 நாட்கள் கல்லூரிகள் – தமிழக அரசு

Default Image

வரும் 8 ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில்,அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு ஜனவரி 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த  நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, இளநிலை, முதுநிலை படிக்கும் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் வரும் பிப்ரவரி மாதம் 8-ஆம் தேதி முதல் தொடங்க தமிழக அரசு அனுமதி வழங்கியது.

 இந்நிலையில் வரும் 8 ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறப்பதற்கான அரசாணையை  வெளியிட்டுள்ளது தமிழக அரசு.மேலும் அந்த அரசாணையில் வாரத்தில் 6 நாட்கள் கல்லூரிகள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்