மேலவளவு கொலை ..! முன் விடுதலை செய்யப்பட்ட 13 பேரும் ஊருக்குள் நுழைய தடை..!
மதுரை மாவட்டத்திலுள்ள மேலவளவு கிராமத்தில் கடந்த 1996-ம் ஆண்டு பட்டியலின வகுப்பை சார்ந்த முருகேசன் என்பவர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக முருகேசன் உட்பட 7 பேர் 1997 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த படுகொலை வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டது.அதில் 2008-ம் ஆண்டு அண்ணா பிறந்தநாளில் நன்னடத்தை காரணமாக 3 பேரை முன்விடுதலை செய்தனர். பின்னர் ஒருவர் இறந்த நிலையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மீதமுள்ள 13 பேரையும் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என மேலூர் தொகுதி எம்.எல்.ஏ., பெரியபுள்ளான் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து மீதம் உள்ள 13 பேரையும் விடுதலை செய்யுமாறு அரசு உத்தரவிடப்பட்டு கடந்த 9-ம் தேதி விடுதலை செய்யப்பட்டனர்.முன்விடுதலை எதிர்த்து வழக்கறிஞர் ரத்தினம் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது முன் விடுதலை செய்யப்பட்ட 13 பேரும் ஊருக்குள் நுழைய கூடாது. வழக்கு முடியும்வரை வேலூரில் 13 பேரும் வேலூரில் தங்கி இருப்பதை மதுரை, வேலூர் எஸ்.பிக்கள் உறுதிப்படுத்த வேண்டும்.13 பேரும் முகவரி , செல்போன் எண்களை போலீசாரிடம் வழங்கப்படும் உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மாதத்தில் 2, 4 -ம் வார ஞாயிற்றுக்கிழமையில் நன்னடத்தை அலுவலர் முன் 13 பேரும் ஆஜராக வேண்டும். முன் விடுதலை பெற்றவர்களிடம் பாஸ்போர்ட் வைத்திருந்தால் அதை மதுரை எஸ்.பி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுவதை மதுரை மாவட்ட எஸ்பி உறுதி செய்ய வேண்டும். இது தொடர்பாக முன்விடுதலை செய்யப்பட்டவர்கள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும்.மேலும் முன் விடுதலை தொடர்பான அரசாணை தடை விதிக்க உயர்நீதிமன்ற கிளை மறுப்பு தெரிவித்து உள்ளது. இந்த வழக்கை ஜனவரி 6-ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது.