அலிபாபாவும் 40 திருடர்களும் ! சர்ச்சையாக பேசிய சீமான் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு

அமைச்சர்கள் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக சீமான் மீது தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையத்தில் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், அலிபாபாவும் 40 திருடர்களும் என்பதுபோல, அம்மாவும் 40 திருடர்களும் என்பதுபோல தமிழக அமைச்சர்கள் உள்ளனர். இப்போது அம்மா இல்லை, திருடர்கள் தான் இருக்கிறார்கள்” என்று கூறினார் .
சீமான் இவ்வாறு பேசியது குறித்து அதிமுக பிரமுகர் சுயம்பு என்பவர் தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.இந்த நிலையில் சீமான் மீது 153(ஏ), 505(1)(பி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுளள்து.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025