அழகர் கோவில் சித்திரை திருவிழா…! கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு…! பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு…!
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று நடைபெறுகின்ற நிலையில், கொரோனா இரண்டாம் அலை காரணமாக திருவிழாக்களை கோயில் வளாகத்தில் நடத்துமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மதம் சார்ந்த கூட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரையில் சித்திரை திருவிழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறக்கூடிய ஒரு விழாவாகும். இதனை அடுத்து அழகர்கோவிலில் உள்ள சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவில் நேற்று எதிர்சேவை நடைபெற்றது.
பின் கோயில் வளாகத்திலேயே கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று நடைபெறுகின்ற நிலையில், கொரோனா இரண்டாம் அலை காரணமாக திருவிழாக்களை கோயில் வளாகத்தில் நடத்துமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், பாரம்பரிய விழாக்கள் பூஜைகள் ஆகம விதிப்படி கோயில் வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கள்ளழகர் , குதிரை வாகனத்தில் ஆடி ஆடி செயற்கை வைகை ஆற்றில் இறங்கினார்.