தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை,வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும்,நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.
மேலும்,தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்றும்,நாளையும் பலத்தக்காற்று மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும்,
மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகள்,தெற்கு மகாராஷ்டிரா,கோவா,கேரளா கர்நாடகா கடலோரப் பகுதிகள் மற்றும் இலட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 5ஆவது நாளாக அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் சோகத்தில் உள்ளனர். கடந்த 4…
சென்னை : ரஜினிகாந்தை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு இருவரும் விவாகரத்து செய்வதாக பேசி முடிவெடுத்து அறிவித்த நிலையில், இது ரசிகர்களுக்கு…
ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது…
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…