#Alert:இன்று புயல் உருவாகும்…தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் எச்சரிக்கை!
வங்கக்கடலில் நேற்று முன்தினம் காலை தெற்கு அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.இதனையடுத்து,இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் பின்னர் மே 8 ஆம் தேதி புயலாக வலுபெற வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.அவ்வாறு உருவானால் இந்த புயலுக்கு ‘அசானி புயல்’ என்று வானிலை ஆய்வாளர்கள் பெயரிடுவார்கள் என்று கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து,வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மதியம் ஆழ்ந்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது என்று சென்னை வானிலை மையம் அறிவித்தது.இந்நிலையில்,ஆழ்ந்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதால் வங்கக்கடலில் இன்று புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் தொடர்ந்து நகர்ந்து,மே 10 ஆம் தேதி ஆந்திரா ஒடிசா கடற்கரையை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக,ஆந்திரா, ஒடிசா,மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம்,தமிழகத்தில் நாளை (மே 9 ஆம் தேதி) 17 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி,புதுக்கோட்டை,தஞ்சை,திருவாரூர்,நாகை,மயிலாடுதுறை, கடலூர்,அரியலூர்,திருச்சி,கரூர்,பெரம்பலூர்,கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி,கிருஷ்ணகிரி,ஈரோடு,நாமக்கல்ம்,காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மேலும்,அந்தமான் கடல், தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 45 முதல் 55 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
DD over Southwest BOB near lat 10.8°N and long 90.1°E, about 300 km WSW of Port Blair (Andaman Islands).To move northwestwards and intensify into a Cyclonic Storm over SE Bay of Bengal in the morning of 8th May and into a severe cyclonic storm over EC BOB by 08th May evening. pic.twitter.com/YEEH86qY9s
— India Meteorological Department (@Indiametdept) May 7, 2022