அலர்ட்.! தமிழகத்தில் 2 நாட்களுக்கு ‘வெயில்’ 3 நாட்களுக்கு ‘மழை’…வானிலை மையம் தகவல்.!!
தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை இன்றும் நாளையும் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கொடுத்துள்ளது.
இன்றும், நாளையும் வெயில் அதிகரிக்கும்
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். என சென்னை வானிலை ஆய்வு மையம் அலர்ட் கொடுத்துள்ளது.
இதன் காரணமாக கர்ப்பிணிகள், குழந்தைகள் நண்பகல் 12 முதல் மதியம் 3 மணி வரை வெளியே வர வேண்டாம். இளநீர், மோர், தண்ணீர் போன்றவற்றை அடிக்கடி குடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் எனவும் தகவல் தெரிவித்துள்ளது.
3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவக்கூடும். இதன் காரணமாக, தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவக்கூடும். இதன் காரணமாக,
20 -ஆம் தேதி தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது மிதமான மழை பெய்யக்கூடும்.
21 மற்றும் 22 ஆகிய தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.