#Alert:4 நாட்களுக்கு மழை;50 வேகத்தில் காற்று – வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக நான்கு நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும்,இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
“தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.அதைப்போல,புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னையப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும்,நகரின் ஒரு சில இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும்,லட்சத்தீவு,கேரள கடலோரப் பகுதிகளில் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் தமிழக கடலோரப் பகுதிகள்,மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Tamilnadu Forecast pic.twitter.com/eLdX7DqNkJ
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) May 19, 2022