தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியதில் இருந்து கடுமையான வெப்பம் நிலவுகிறது.அந்த வகையில் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டியுள்ளது.மற்ற மாவட்டங்களில் சதத்தை நோக்கி வெப்பம் அதிகரித்து வருகிறது.குறிப்பாக கடந்த நூற்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது பல இடங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில்,நாளை முதல் மே 28ஆம் தேதி வரை 25 நாட்களுக்கு அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கொளுத்த உள்ளது.ஏற்கனவே பல மாவட்டங்களில் 108 பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் வாட்டி வதைக்கும் நிலையில்,மேலும் வெப்பம் அதிகரிக்க உள்ளது.
இதனிடையே,வானிலை மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறுகையில்:”மே மாதத்தில் இயல்பை விட சற்று குறைவாகவே வெப்ப நிலை நிலவும்.அதே சமயம் வங்கக்கடல் பகுதியில் வீசும் காற்றின் வேகம் பொருத்து வெப்பநிலை மாறுபடும்.
தமிழகத்தில் காலை 10 மணியில் இருந்து மாலை 3 மணி வரை சூரியக் கதிர்கள் நேரடியாக தாக்கக் கூடும்.இந்த வேளையில் குழந்தைகள், வயதானவர்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்”,என்று கூறினார்.
கோடை வெப்பத்தை சமாளிக்க பொதுவாக,கோடைக்காலத்தில் நிலவும் கடும் வெயிலை சமாளிக்க உடலுக்கு குளிர்ச்சியான தர்பூசணி,வெள்ளரி போன்ற நீர்ச்சதுக்கள் நிறைந்த உணவுப்பொருட்களை எடுத்துக் கொள்வது நல்லது.தேவையின்றி மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்கலாம்.குறிப்பாக,தினமும் தண்ணீர் அதிகம் பருக வேண்டும்.மேலும்,பிரஸ் ஜூஸ்(பழச்சாறு),இளநீர் போன்றவை பருக வேண்டும்.
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக…
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…