#Alert:மக்களே கவனம்…இன்று முதல் 25 நாட்கள் ‘அக்னி நட்சத்திரம்’!

Default Image

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியதில் இருந்து கடுமையான வெப்பம் நிலவுகிறது.அந்த வகையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டியுள்ளது.மற்ற மாவட்டங்களில் சதத்தை நோக்கி வெப்பம் அதிகரித்து வருகிறது.குறிப்பாக கடந்த நூற்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது பல இடங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது.

அக்னி நட்சத்திரம்:

இந்நிலையில்,இன்று முதல் மே 28 ஆம் தேதி வரை 25 நாட்களுக்கு ‘அக்னி நட்சத்திரம்’ எனப்படும் கத்திரி வெயில் கொளுத்த உள்ளது. ஏற்கனவே பல மாவட்டங்களில் 100 பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் வாட்டி வதைக்கிறது.

10 மாவட்டங்களில் சதம்:

ஏற்கனவே,நேற்று 10 மாவட்டங்களில் வெப்பம் சதமடித்துள்ளது.அந்த வகையில்,அதிகபட்சமாக வேலூரில் 105 டிகிரி பாரன்ஹீட்டும்,திருத்தணி மற்றும் திருச்சியில் 104 டிகிரி பாரன்ஹீட்டும்,மதுரையில் 103 டிகிரியும்,ஈரோடு,கரூர்,தஞ்சையில் 102 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.மேலும்,சேலத்தில் 101 டிகிரி, பாளையங்கோட்டையில் 100 டிகிரி என வெப்பநிலை அதிகரித்து காணப்படும் நிலையி,இன்று முதல் கத்தரி வெயில் தொடங்குகிறது.

தமிழகத்தில் மழை:

எனினும்,தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் மிதமான மழையும்,நாளை கனமழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெளியே செல்ல வேண்டாம்:

இதனிடையே,வானிலை மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறுகையில்:”மே மாதத்தில் இயல்பை விட சற்று குறைவாகவே வெப்ப நிலை நிலவும்.அதே சமயம் வங்கக்கடல் பகுதியில் வீசும் காற்றின் வேகம் பொருத்து வெப்பநிலை மாறுபடும்.

தமிழகத்தில் காலை 10 மணியில் இருந்து மாலை 3 மணி வரை சூரியக் கதிர்கள் நேரடியாக தாக்கக் கூடும்.இந்த வேளையில் குழந்தைகள், வயதானவர்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்”,என்று கூறினார்.

வெயிலை சமாளிக்க:

கோடை வெப்பத்தை சமாளிக்க பொதுவாக,கோடைக்காலத்தில் நிலவும் கடும் வெயிலை சமாளிக்க உடலுக்கு குளிர்ச்சியான தர்பூசணி,வெள்ளரி போன்ற நீர்ச்சதுக்கள் நிறைந்த உணவுப்பொருட்களை எடுத்துக் கொள்வது நல்லது.தேவையின்றி மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்கலாம்.குறிப்பாக,தினமும் தண்ணீர் அதிகம் பருக வேண்டும்.மேலும்,பிரஸ் ஜூஸ்(பழச்சாறு),இளநீர் போன்றவை பருக வேண்டும்.வெளியில் செல்லும்போது குடையுடன் ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்து செல்வது நல்லது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tvk
TVK Leader Vijay speech in TVK general committee meeting
thirumavalavan aadhav arjuna
RCB IPL
Aadhav Arjuna
TVK General Committee meeting
edappadi palanisamy sabanayagar appavu