சென்னை:வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் அதை ஒட்டிய நிலநடுக்கோட்டுப் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனால்,இன்று ராமநாதபுரம், புதுக்கோட்டை,டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனைத் தவிர மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலேயே நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.அதைப்போல,நாளை முதல் முதல் டிசம்பர் 19 ஆம் தேதி வரை தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும்,மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலேயே நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்,அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி முதல் 24 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை ஒட்டி இருக்கும்.
குறிப்பாக இன்று முதல் 19.12.2021 வரை தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலில் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிமீ முதல் மணிக்கு 60 கிமீ வேகம் வரை வீசக்கூடும். குறிப்பிட்ட காலத்திற்கு கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…
நாகப்பட்டினம் : நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.06] உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர்…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…