#Alert:இன்று உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – மழைக்கு வாய்ப்பு!

சென்னை:தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய நிலநடுக்கோட்டுப் பகுதியில் இன்று புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய நிலநடுக்கோட்டுப் பகுதியில் நேற்று புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக கணித்திருந்தது.
ஆனால்,அதன்பின்னர் தென்கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவாகலாம் என கணிக்கப்பட்ட நிலையில்,அவை காலதாமதமாக உருவாகிறது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது.
இந்நிலையில்,தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய நிலநடுக்கோட்டுப் பகுதியில் இன்று புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும்,தென் கடலோர மாவட்டங்கள்,புதுக்கோட்டை,டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்,ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும்,இன்று முதல் 20.12.2021 வரை தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் கடல் ஆகிய பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிமீ முதல் மணிக்கு 60 கிமீ வேகம் வரை வீசக்கூடும் என்பதால் குறிப்பிட்ட காலத்திற்கு கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘இதெல்லாம் நமக்கு தேவையா குமாரு’.., சூட்கேஸ் உள்ளே காதலி.! வசமாக சிக்கிக்கொண்ட மாணவன்.!
April 12, 2025
பாஜக – அதிமுக கூட்டணி: ”விரட்டியடித்து தூக்கி எறியப் போவது உறுதி”- தவெக தலைவர் விஜய்.!
April 12, 2025